கும்ப ராசி அன்பர்களே …! கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடல் தாண்டி வரும் தகவல்கள் மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும், வீண் அலைச்சல் குறையும்.
எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்களில் இருந்தாலும் நல்லபடியாகவே நடந்து முடியும். தேவையற்ற மனக் கவலை மட்டும் இருந்து கொண்டிருக்கும். தயவு செய்து இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள். வசீகரமான பேச்சு அனைவரிடமும் கவரும் விதத்தில் அமையும். இன்று காதலர்களுக்கும் இனிமையான நாளாக இருக்கும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.