கும்பம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். குடும்ப சுமை கூடும். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று எந்த வேலையை முதலில் கவனிப்பது என்ற குழப்பம் இருக்கும்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
தந்தை மகன் உறவு சுமுகமாக காணப்படும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை தாமதம் இருக்கும். இருந்தாலும் முன்னேறி செல்வீர்கள் கவலை வேண்டாம். பாடத்தை நன்றாக கவனித்துப் படியுங்கள், படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் இளம் சிவப்பு