Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும்.. தொலைபேசி தகவல் நல்லதாகவே இருக்கும்..!!!

கும்ப ராசி அன்பர்களே, இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் காட்டுவீர்கள், ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றி விடும், தொழில் வியாபாரம் இருந்த சிரமங்கள் விலகிச் செல்லும், பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.விருந்து  விழாக்களில் கலந்து கொள்வீர்கள். இன்று குடும்ப பிரச்சினைகள் சரியாகும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும்.

பணம் வரவு திருப்திகரமாக இருக்கும்,  ஆனால் வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும், சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனமாக இருங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் ஈடுபடுவது  ரொம்ப நல்லது. பயணங்களின் பொழுதும், வாகனத்தில் செல்லும்போதும் ரொம்ப  எச்சரிக்கை இருக்கட்டும், வாகனத்தில் செல்லும்போது தொலைபேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம்.

தயவு செய்து இதை தவிர்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள்,  ஜாமின் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம். நான் பணம் வாங்கி தருகிறேன் என்று எந்தவித உத்திரவாதமும் யாருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டாம்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிரமம் எடுத்து படிக்க வேண்டியிருக்கும், கடுமையாக உழைத்து படியுங்கள், படித்தபின் எழுதிப் பாருங்கள், சிறப்பாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

Categories

Tech |