கும்பம் ராசி அன்பர்களே …! இன்று முடிவு செய்தவுடன் செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணச்செலவில் தயவுசெய்து சிக்கனத்தை பின்பற்ற வேண்டும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாக்கும். ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் உங்களுக்கான நேரம் வருங்க.
தக்க சமயத்தில் உங்களுக்கு நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தக்க சன்மானமும் உங்களுக்கு கிடைக்கப் பெறும். சோம்பல் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலமும் ஏற்படும். உங்களுடைய திறமை வெளிப்படும் காரியமாக நடப்பதினால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். தைரியமானவர்கள் எதிர்ப்புகளும் மறையும் பகை பாராட்டி அவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளும் குறையும். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். காதலர்களுக்கும் இனிமையான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.