Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு… நிதானம் தேவை …மரியாதை அதிகரிக்கும்…!

 

கும்பம் ராசி அன்பர்களே …!   இன்று குடும்பத்தினருடன் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பேசும் பொழுது நிதானமாகப் பேசுங்கள், தேவையில்லாத விஷயத்திற்கு தயவுசெய்து கோபப்பட வேண்டாம். மற்றவரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சகோதர்களிடம் தேவையில்லாத சண்டைகள் ஏதும் போட வேண்டாம். தந்தையிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். சபைகளில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைத்தாலும் தேவையில்லாத விஷயத்திற்காக கோபம் மட்டும் படாமல் இருங்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள் கவலை வேண்டாம்.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இன்று திறமை வெளிப்படும், பணவரவு திருப்திகரமாக இருக்கும். உச்சத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருந்தாலும் தேவையில்லாத விஷயத்திற்காக கோபப்படாதீர்கள். கூடுமானவரை மனைவியிடம் அன்பாக நடப்பதற்கு முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

காதலர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமூகமான உறவை இருக்கும். ஆனால் திடீரென்று கோபம் இருக்கும் அதை கட்டுப்படுத்திதான் ஆக வேண்டும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |