கும்ப ராசி அன்பர்களே …! இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. பணியாளர்களிடம் கூடுதல் கவனம் வேண்டும். பயணங்களில் மாற்றம் செய்ய நேரிடும். இன்று குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கூடும்.உள்ளம் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர் மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாலை நேரங்களில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுகையில் இசை பாடலை ரசித்து மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த நபரை இன்று சந்தித்து உரையாட வேண்டிய சூழலும் இருக்கும். கொடுக்கல்-வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
புதிய திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு பெற வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.