கும்ப ராசி அன்பர்களே …! சுமை குறையும் நாளாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்து சேரும்.
மற்றவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். நிதி உதவியும் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலையை கையாண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் பொறுமை வேண்டம்.
முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.