Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…உற்சாகமடைவீர்கள்… உடல் நலம் சீராகும்…!

கும்ப ராசி அன்பர்களே …!      கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் விலகிச் செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலம் சீராகும். தனிப்பட்ட வேலைகள் நடந்து முடியும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கும் அதனால் மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பிள்ளைகளுடன் தயவுசெய்து அனுசரித்துச் செல்லுங்கள் தேவையில்லாத கருத்து வேற்றுமைகளை உருவாக்கி கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள் அது மட்டும் இல்லைங்க சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள்.

உங்களுடைய வசீகரமான பேச்சு இன்று அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். அதனால் புதிய காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்:  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |