கும்ப ராசி அன்பர்களே …! தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு கிடைக்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் எடுப்பதில் மூலம் நன்மை உண்டாகும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம் விட்டு பேசி செய்வது நல்லது. குடும்ப வருமானம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்தை தூங்கச் செல்லுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் இசைபாடல் ரசித்து மகிழுங்கள் உள்ளம் நன்றாக இருந்தால் அனைத்து விஷயத்தையும் மிக சிறப்பாக செயலாற்றுவீர்கள்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.