கும்ப ராசி அன்பர்களே …! இன்று நினைத்ததை முடித்துக் காட்டும் நாளாக இருக்கும். அதனால் மனம் நிம்மதியாக இருக்கும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாகன சேர்க்கை கூடும். சகோதரர்கள் மத்தியில் ஒற்றுமை கூடும். சொத்துப் பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். திருமணம் நடத்துவதில் ஏற்பட்ட தடை தாமதங்கள் நீங்கும். வேலை செய்யும் பிள்ளைகள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.
மற்றவர்களிடம் நீங்கள் அன்புடன் நடந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம்நீல நிறம்.