Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…தேவைகள் பூர்த்தியாகும்…கவலை வேண்டாம்…!

கும்ப ராசி அன்பர்களே …!       இன்று வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள் ஆகியிருக்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகமாக செலவாகும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்யுங்கள். பண வரவு சிறப்பாக தான் இருக்கும். ஆனால் வீண் செலவுகள் மட்டும் கட்டுக்கடங்காமல் செல்லும். சொத்துக்கள் வாங்குவது விற்பதில் கவனம் வேண்டும்.

பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் கவனம் வேண்டும். மிக முக்கியமாக பயணங்களின்போது உடமைகள் மீது கவனம் வேண்டும். காதலர்கள் கண்டிப்பாக என்று பொறுமை காக்க வேண்டும். நிதானமாகப் பேச வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காட்டாதீர்கள், பொறுமையாக இருந்தால் மட்டுமே அனைத்து விஷயங்களையும் உங்கள் வசம் ஆக்கிக் கொள்ளலாம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |