கும்ப ராசி அன்பர்களே …! தயவுசெய்து யாரிடமும் எந்தவித வாக்குறுதிகளின் கொடுக்காதீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து பேசுவார்கள். நண்பர்களிடம் கொஞ்சம் பேசும்போது கவனமாக இருங்கள். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமை காக்கவேண்டும். வாகனத்தில் செல்லும்போதும் நிதானமாக தான் செல்ல வேண்டும். பொது காரியங்களில் ஈடுபடும் போது ரொம்ப கவனமாக ஈடுபடவேண்டும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை ஏற்க மறுக்கும் உங்களுடைய மனம் கவலை கொள்ளக் கூடும். மதிப்பு இருந்தாலும் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் வேண்டும். அதற்கு மாறான சில சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எச்சரிகையாக செயல்படுவது நல்லது. வியாபாரம் மேன்மைக்கு உதவும். எதையும் திறம்பட நீங்கள் செய்தாலும் பொறுமை என்பதை கண்டிப்பாக கொடுத்துதான் ஆகவேண்டும்.
இறைவழிபாட்டில் நாட்டம் செல்லும் இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். காதலர்கள் பொறுமை காக்க வேண்டும் நிதானமாக பேசவேண்டும், வாக்குவாதத்தில் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. தயவுசெய்து ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.