Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பயம் உண்டாகும்…நிதானம் தேவை…!

கும்ப ராசி அன்பர்களே …!     இன்று மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு வருத்தப்பட்டு கொண்டிருப்பீர்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு நல்வழியை கொடுக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். யாரிடமும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். இருந்தாலும் சில நேரங்களில் மந்தமான சூழல்தான் நிலவும்.

எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தயவு செய்து பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுங்கள் காரியத்தடை தாமதம் ஏற்படலாம். மனதில் தைரியம், குடும்பத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. போராட்டத்தைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்து நின்று வெற்றி பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆனால் இன்று கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

இன்று எந்த ஒரு விஷயத்தையும் மிகமிக பொறுமையாகவும், நிதானமாகவும் தான் செய்ய வேண்டும். தயவு செய்து புரிந்து கொண்டு இன்று நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் எப்போதும் போலவே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |