கும்ப ராசி அன்பர்களே …! விமர்சனத்தை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகிச்செல்லும். பணவரவும் சீராகவே இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று அனைத்து விதமான அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும்.
மதிப்பு மரியாதை உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். வீண் விவாதங்களை மட்டும் எப்போதும் தவிர்த்துவிடுங்கள். குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்கக் கூடிய வாய்ப்புகளும் இன்று உண்டாகும். இன்று உங்களுடைய பொருளாதாரம் மிகவும் சீராகவே இருக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். அனைவரையும் கவரும் விதத்தில் பேசியவீ ர்கள்.
புதியதாக காதலில் வழிபடக் கூடிய சூழலும் உண்டு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்டநிறம்: இளஞ்சிவப்பு மற்றும் இளம்பச்சை நிறம்.