கும்ப ராசி அன்பர்களே …! பணவரவு அதிகரித்து பரவசமாக இருக்கும். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி கொடுக்கும். இன்று சுப விரயங்களும் உண்டாகலாம். தங்களுக்கு சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவிர்கள்.
சாதுரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியைத் தரும் வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தயவுசெய்து புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.
கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குரு பகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
ஆகஸ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.