Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…மதிப்பு கூடும்….!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று நல்ல முன்னேற்றமான நாளாக அமையும் குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும் உடல் ஆரோக்கியம் சீராகும். உதிரி வருமானங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக நடந்து முடியும்.

குடும்பத்தில் இருப்பவர் நடவடிக்கை கொஞ்சம் கோபப்படுவது அமையும். கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடிய சூழல் உண்டு.

உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் சிறப்பாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் கரும் நீல நிறம்.

Categories

Tech |