Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்…தனவரவு தாராளமாக வந்து சேரும்…!

கும்ப ராசி அன்பர்களே …!      சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகும். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். சுறுசுறுப்பாக செயல்படுபவர்கள் தனவரவு தாராளமாக வந்து சேரும், குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறைகூறிக் கொண்டிருப்பார், அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம்.

கவனமாக இருங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். செயல்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. கூடுமானவரை சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி ஏற்படும்.

திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் மிக சிறப்பாக நடக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அது சத்தையும் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |