கும்ப ராசி அன்பர்களே …! இன்று மனதில் இருந்த கவலை நீங்கும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உருவாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பெண்களுக்கு சமையல் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அதே போல உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும்.
இன்று காதலர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.