Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…வளர்ச்சி ஏற்படும்… வேலைப்பளு அதிகரிக்கும் …!

கும்ப ராசி அன்பர்களே …!     அதிக பணம் வரவு காண புதிய வழிகள் தென்பட கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் வருமான குறைவும், மறுபக்கம் கடன் கொஞ்சம் மனதிற்கு சஞ்சலத்தைக் கொடுக்கும். வழக்குகளால் பெட்டி செலவுகள் ஏற்படலாம். தேவையில்லாத பொருட்களை மட்டும் தயவு செய்து நீங்கள் வாங்க வேண்டாம். செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

எந்த ஒரு புதிய முயற்சிகளை இப்போதைக்கு வேண்டாம். புதியதாக ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும் வீட்டை விட்டு வெளியில் தங்க கூடிய சூழல் இருக்கும். திடீர் செலவுகள் அதிகரிக்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடப்பதற்கு உங்களுடைய முயற்சிகள் வேண்டும். மனக்கவலை அவ்வப்போது வந்து செல்லும்.

உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு முயற்சியுடன் நீங்கள் செயல்படுவீர்கள். பொருள் வரவு சீராகவே இருக்கும். பிள்ளைகளால் சிறுசிறு தொல்லைகள் வந்து செல்லும். காதலர்கள் இன்று கண்டிப்பாக வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |