கும்ப ராசி அன்பர்களே …! கடந்த கால உழைப்பின் பயன் இன்று உங்களுக்கு கிடைக்கும். எதிரி தொல்லையை சமயோசிதமாக சரி செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். பெண்கள் தாயின் அன்பை பெறக்கூடும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்ற பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்.
சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்த வேண்டும். பேச்சில் நிதானத்தையும் கடைபிடிக்கவேண்டும். மேலதிகாரிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். காதலர்கள் எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபடாமல் பொறுமையாகவே இருங்கள். அதேபோல கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மற்றவர் கூறுவதை பொறுமையாக கேட்டு அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல வழியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.