Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…சிந்தனை மேலோங்கும்…வேலைப்பளு குறையும்…!

கும்ப ராசி அன்பர்களே …!    இன்று  மகிழ்ச்சி கூடுதலாக இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் நல்ல பலன் இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். மன தைரியமாக இருக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை கூடும். பொருட்களை மட்டும் நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

வாகனச் செலவு ஏற்படும். வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து, வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். காதலர்களுக்கும் சிறப்பான நாளாகவே இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஓர் அன்பான ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |