கும்பம் ராசி அன்பர்களே…! எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பது என்பது கொஞ்சம் அரிதுதான். திருப்தியான ருசியான உணவு கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். சுகம் என்பது தேடப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். இன்று கடுமையான உழைப்பு இருக்கும். உடல் சோர்வு இருக்கும். தனலாபம் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும். இன்று எதிலும் கவனத்தை மற்றும் சிதறவிடாமல் செய்யுங்கள். கூடுமானவரை கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்.
அலைச்சல் காரிய தாமதம் இருக்கதான் செய்யும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். மதியத்திற்கு மேல் உங்களுக்கு அனைத்து விஷயங்களும் நல்லதையே கொடுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு ஏதும் வேண்டாம். மனதில் ஏதேனும் ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு மட்டும் ஆளாக வேண்டியிருக்கும் கவலைப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள் இன்று காதலர்களுக்கு இனிய நாளாக இருக்கும்.
இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.