கும்ப ராசி அன்பர்களே …! இன்று இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள் ஆக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தொழிலில் பணவரவு தாராளமாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
உங்களுடைய மேன்மையான சிந்தனையால் அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திட்டங்களை தீட்டுவீர்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்று முன்னேற்றமே நீங்கள் அடைவீர்கள். அதேபோல தொழிலில் மனம் தளராது உழைத்து விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். இன்று நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். காதலர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.
திருமணத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை மிகவும் சிறப்பாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. என்றும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.