Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பயம் விலகும்…உறுதி பிறக்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!      தங்கள் பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி உண்டாகும். மனதில் உறுதி பிறந்திருக்கும். எதிர்பால் இனத்தவரால் நன்மை உண்டாகும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும்.

எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.  எதைப்பற்றியும் பயமில்லாமல் காரியத்தை செய்வீர்கள். நீங்கள் எந்த காரியத்தை செய்கின்றிரோ அதுபோலவே உங்களுக்கு அதற்கான பலன்கள் கிடைக்கும். உற்சாகமாகவே காணப்படுவீர்கள். சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருந்தாலும் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள்.

காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களது அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |