Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…பணத் தேவை அதிகரிக்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!  இன்றைய செயல்பாடுகள் அனைத்திலும் கொஞ்சம் எதிர்பார்த்த உதவிகள் மற்றும் வங்கி கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் கொஞ்சம் ஏற்படலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். எப்போதுமே கோபத்தை கட்டுப்படுத்துவது தான் ரொம்ப நல்லது. திடீர் பணத் தேவை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படும்.

வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. உச்சத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். உறவினர் மூலம் நன்மை உண்டாகலாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதலர்கள் மட்டும் கொஞ்சம் பொறுமை காக்கவேண்டும். பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

அதேபோல் மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் தயவு செய்து என்ன வேண்டாம். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |