கும்ப ராசி அன்பர்களே …! இன்று சிந்தனையுடன் செயல்படும் நாள். உடன்பிறந்தவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்று விதத்தை பின்பற்றுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
கடன் தொல்லைகள் படிப்படியாக குறையும். தொழிற்சங்க அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு உண்டாகும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் நிம்மதியாகவே காணப்படும். காதலர்களுக்கு இன்று இனிமை காணும் நாளாக இருக்கும்.
அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.