Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மகிழ்ச்சி கூடும்…மந்தநிலை உண்டாகும்…

கும்ப ராசி அன்பர்களே …!   தன்னம்பிக்கையும் மனதில் மகிழ்ச்சியும் கூடும். ஆனால் திட்டமிட்ட பணியில் சில மாற்றங்கள் நிகழும். வியாபாரத்தில் திட்டமிட்டு தான் நீங்கள் இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். வருமானத்தை கூட்டுவதற்கு கடுமையாக உழைப்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கும். இன்று வாகனத்தில் செல்லும் போது நிதானம் வேண்டும்.யாருக்கும் எந்தவித வாக்குகளும் கொடுக்க வேண்டாம். இன்று பஞ்சாயத்துகளிலும் கலந்து கொள்ள வேண்டாம்.அதேபோல ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக செயல்படுங்கள். தொழில் வியாபாரம் கொஞ்சம் மந்தமான நிலையில் தான் இருக்கும். ஆனால் வருமானம் ஓரளவு சீராகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைப்பதற்கு உங்களுடைய பேச்சில் கட்டுப்பாடு வேண்டும்.உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள், சரியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். கணவர் மனைவிக்கிடையே திடீர் பிரச்சினைகள் இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பிள்ளைகள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்களிடம் சில வாக்குவாதங்கள் வரலாம் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும்  நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |