Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…மரியாதையும் கூடும்…சிந்தனை மேலோங்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   அனைத்து வகையிலும் உங்களுக்கு நன்மைகளும் தனலாபமும் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன யோகம் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். பிரிந்து வரக்கூடியவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டியிருக்கும். குழந்தைகளின் கல்விக்காக பணம் கொஞ்சம் செலவாகும். இருக்கக் கூடிய சூழ்நிலையில் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். காதலில் உள்ளவர்களுக்கு மட்டும் கொஞ்சம் கடுமையான சூழல் நிலவும்.

பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் எதுவும் சரியாகிவிடும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |