கும்ப ராசி அன்பர்களே …! இன்று சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி அதிகமாக பணிபுரிவது அவசியம். வரவை விட செலவு இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. உறவினர் நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். நெருக்கம் ஏற்படும். எதிர்ப்பாளர்கள் சரக்குகள் வருவதில் தாமதம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனை கேட்டு செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகிச்செல்லும். வியாபாரம் தொடர்பான பிரச்சினையை கையாளும் போது ரொம்ப கவனமாக கையாளுங்கள. காதலர்கள் இன்று சில விஷயங்களைப் பேசும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேச வேண்டும்.
அதே போல பொது விஷயங்களைப் பற்றி பேசும் பொழுதும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.