Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பணத்தட்டுப்பாடு நீங்கும்…மரியாதை அதிகரிக்கும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகி காணப்படும். இனிய பயண சுகம் ஏற்படும். பல வகையிலும் பண வரவு இருக்கும். புதிய நண்பர்கள் அமைவார்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். மரியாதையும் அந்தஸ்தும் அதிகமாகும்.

முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த பணத்தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையில் உரையாடும்போது கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அவரிடம் பேசுங்கள் கோபம் இல்லாமல் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

காதலர்கள் கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிஷ்ட திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |