Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்…வெற்றி உண்டாகும்…!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். பல வழிகளிலும் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். எதிர்ப்பாலீனத்தவர்களால் ஏற்றங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் கவலை வேண்டாம். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் ஆர்வம் இருக்கும். பணம் திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்துமுடித்து நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

பிரச்சனைகளை இன்று தெளிவாக நீங்கள் சமாளிக்கக்கூடிய திறன் வெளிப்படும். உங்களுடைய புத்திகூர்மையும் வெளிப்படும். இன்று காதலருக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |