கும்ப ராசி அன்பர்களே …! இன்று உற்சாகத்தோடு பணிபுரியும் நாளாக இருக்கும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை இருக்கும் அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு நன்மைகள் தரும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும்.
தொட்ட காரியம் அனைத்திலும் நன்மைகளையே பெறுவிர்கள். நல்ல வருவாயையும் அடைவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளுக்கு இடையே அன்பு கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். முயற்சிகளில் நல்ல வெற்றிகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சிறப்புகள் உண்டாகும்.
காதலர்களுக்கும் இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் மிகச் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.