கும்பம் ராசி அன்பர்களே, இன்று சொந்த பணியில் ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம், நண்பர்களையும் நீங்கள் குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். பணியாளர்கள், பணிச்சுமையால் அவதிப்படும். வெளியூர் பயணத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதை தவிர்த்து விடுங்கள். அடுத்தவரை பற்றி பேசுவதையும் தவிர்த்து விட்டால் ரொம்ப நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த சுபிட்சம் கிடைப்பதில் தடை கொஞ்சம் இருக்கலாம். கவனமாக பாடங்களை படிப்பது நல்லது.
எல்லா நன்மைகளும் இன்று இருக்கும். பெண்களுக்கு காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை உருவாகும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். இன்று சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து, சுய மரியாதை உயரும். செல்வாக்கு ஓரளவு இருக்கும். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
யாருக்கும் கடன் பெற்று தருகிறேன் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து விடாதீர்கள். அதிலும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்