Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.. சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாளாகவே இருக்கும். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்களுடைய திறமை மேம்படும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும்.

கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

இன்று கூடுமானவரை  நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு எப்பொழுதுமே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதுமட்டுமில்லை இன்று  சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

அதிர்ஷ்டம்  எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |