கும்பம் ராசி அன்பர்களே, இன்று விரயங்கள் ஏற்படாமல் இருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாகவே இருக்கும். பணம் கைக்கு வந்த நிமிடங்களிலேயே செலவாகிவிடும். தொழில் முயற்சிகளில் புதியவர்களால் சின்ன, சின்ன பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று எதிலும் நன்மை இருக்கும்.
எதிர்பார்த்த பணமும் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும், பிரச்சனை இல்லை. சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள். இடமாற்றம் இருக்கும், சுபச் செலவுகளும் கொஞ்சம் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள்.
பொறுமையுடனும், நிதானத்துடனும் காரியங்களை எதிர்கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
அதிர்ஷ்டமான திசை: மேற்கு