Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…எதிலும் இன்று கவனம் தேவை…புதிய பொறுப்புகள், பதவிகள் வர கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். நிச்சயத்த  காரியங்கள், நிச்சயத்தை படியே நடைபெறும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரக்கூடும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு கிடைக்கும்.

தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். புதிய நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். எந்த விஷயங்களிலும் நீங்கள் ரொம்ப கவனமாகவே இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் அல்லது புதிய பொறுப்புகள் வர கூடும்.

எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக இன்று அணுகி கொள்வது ரொம்ப நல்லது. உங்களது பணி திறமையால் மேலதிகாரிகள் திருப்தி அடையக் கூடும். இன்று எதிர்பார்த்த செயல் ஓரளவு திருப்தியை கொடுக்கும். இன்று வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பொறுமையாக செல்லவேண்டும். யாருக்கும் எந்தவித உத்தரவாதமும், வாக்குறுதிகளையும் தயவு செய்து கொடுக்க வேண்டாம், அதில் மட்டும் கவனம் கொள்ளுங்கள்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எந்த  விஷயத்திலும் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும், பாடங்களை கஷ்டப்பட்டு படியுங்கள், படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |