Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…முயற்சிகள் வெற்றியாகும்.. நல்ல தகவல் வந்து சேரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். இடம் பூமி வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கொண்டு கொள்வீர்கள். புதிய முயற்சி ஓரளவு நன்மை கொடுக்கும். தொழில் வியாபாரம் மந்த கதியில் இருக்கும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று  அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவு தான் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது கேட்டு நடந்து கொள்வது நன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் வரும், பழைய பாக்கிகளும் வசூலாகும். தேவை இல்லாத விஷயத்திற்காக கோபம் படுவீர்கள், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நலல்து. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிஷ்ட நிறம் :  இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |