Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்…. பண விரயம் உண்டாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மாற்றம் நிகழும் நாளாக அமையும்.

கும்பராசி நேயர்களே இன்று தயவுசெய்து அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்களுடைய பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். புதிய நபர்களிடம் மட்டுமில்லை பழைய நண்பர்களிடமும் உங்களுடைய ரகசியங்களைப் பற்றி சொல்ல வேண்டாம். இந்த நாள் உங்களுக்கு ஒரு மற்றம் தரும் நாளாக அமையும். கூடுதல் முயற்சியினால் வியாபாரத்தில் வளர்ச்சி மேம்படும். பண விரயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்த தடைகள் படிப்படியாக நீங்கும். போட்டிகள் பொறாமைகள் விலகிச்செல்லும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும் போது வேகமும் கோபமும் காட்ட வேண்டாம். குடும்பத்தின் வருமானம் உயரும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையும் இருக்கும். சில நேரங்களில் நிம்மதியற்ற நிலை இருக்கும். பிற்பகலுக்கு மேல் எல்லாம் சரியாகிவிடும்.

காலையில் எழுந்திருக்கும்போது குலதெய்வத்தை மனதார வழிபட்டு விட்டு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் என்று எண்ணி எந்தவொரு பணியிலும் ஈடுபட்ட வேண்டும்.  தொலைந்து போன பொருட்கள் கையில் கிடைப்பதற்கான சூழல் இருக்கின்றது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழு மூச்சாக பாடுபடுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்பம் பொங்கும். காதல் உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தாமல் சுகமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது கரு நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபட்ட பின்னர் எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள்  கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் கரு நீலம் மற்றும் பச்சை.

Categories

Tech |