கும்பம் ராசி அன்பர்களே.! யோகமான நாளாக இருக்கும்.
இன்று தொலைதூர நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இல்லத்தார் உங்களுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். எதிர்காலத்திற்கு ஒரு முக்கிய அடித்தளமிட்ட கூடிய நாள். எதிர்காலத்திற்காக உதவக்கூடிய விஷயங்களில் இன்று சில விஷயங்கள் நடக்கும். ஆர்வமுடன் எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்வீர்கள். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். உயர்வான சூழல் இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் சரியாகும். தைரியம் கூடிவிடும். எதிர்ப்புகள் சரியாகும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருப்பீர்கள். நிம்மதி கிடைக்கும். சக நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் அமைதி இருக்கும். விட்டுக்கொடுத்துச் சென்று எல்லாவற்றையும் சரி செய்து கொள்வீர்கள். யோகமான நாளாக இருக்கும்.
தாராளமான பணவரவு இருக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். சேமிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். நினைத்தது கண்டிப்பாக நடக்கும். வீண் பகை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். அதுவும் மாலை நேரத்தில் சரியாகிவிடும். உங்களை பற்றிய தவறான எண்ணம் கொண்டவர்கள் இப்போதும் மனம் வருந்தக் கூடும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற குழப்பத்தை ஏற்படுத்தினாலும் மாலை நேரத்திற்குள் சரியாகும். காதல் வெற்றி ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இன்று புதிய அனுபவம் ஏற்படும். கல்வியில் சில முக்கியமான தகவல்கள் வரக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விநாயகர் சதுர்த்தி என்பதினால் விநாயகரை வழிபட்டு உங்களுடைய கஷ்டங்களை சொல்லி 3 நிமிடங்கள் தியானத்தில் இருந்து விநாயகரை வழிபடவேண்டும். எல்லாவிதமான நன்மையையும் உங்களுக்கு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் சிவப்பு