கும்பம் ராசி அன்பர்களே.! வார்த்தைகளில் தெளிவு வேண்டும்.
இன்று வெற்றிமேல் வெற்றி வந்து சேரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஏற்றங்களும் ஏற்படும். மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படும். பிரச்சனைகள் சரியாகும். மனதிற்குள் இருந்த கவலை நீங்கி விடும். கடுமையான உழைப்பு நிலவினாலும் உழைப்புக்கேற்ற வருமானம் இருக்கும். வியாபாரத்தில் பணத் தேவைகள் ஏற்படும். அதனை நீங்கள் சரிசெய்து கொள்ள வேண்டும். கடன் விவகாரங்களில் தலையிடும் போது கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் தெளிவு வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். கடன் வாங்க வேண்டாம்.
இல்ல தேவைகள் பூர்த்தியாகும். முன்னோர்கள் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். காதலில் பிரச்சினையில்லை. சுமுகமான தீர்வு ஏற்படும். காதலில் மனதிற்கு பிடித்தவரை கரம்பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்கள் இன்று எடுக்கக்கூடிய முயற்சிகளை சிறப்பாக செய்யவேண்டும். கல்வியில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். எதிர்பாராத சில குழப்பங்கள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை