Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! மகிழ்ச்சி கூடும்….! புத்திசாலித்தனம் வெளிப்படும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! சுமூகமான சூழல் உருவாகும்.

இன்று மகிழ்ச்சி கூடும். வருகின்ற வாய்ப்புகளை உங்களால் சரியான முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடைய புத்திசாலித்தனம் வெளிப்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று சுமூகமான சூழல் இருக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது சமாதான முறையில் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பண கஷ்டம் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தொழில் ரீதியாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். தொந்தரவு கொடுத்தவர்கள் காணாமல் போவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். நல்ல பலன்களை உடனடியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்கள் பக்குவமாக செயல்படவேண்டும். காதலில் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு கல்விக்காக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பெற்றோர்களும் நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |