கும்பம் ராசி அன்பர்களே.! எல்லாவிதமான சூழலும் உங்களுக்கு சுமுகமாக இருக்கும்.
இன்று கொடுக்கல் வாங்கல் எல்லாம் ஒழுங்காக நடக்கும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைபட்ட காரியங்களெல்லாம் சுறுசுறுப்பாக நடக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கையும் இருக்கும். உற்றார் உறவினர்களின் நட்பு இருக்கும். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கண்டிப்பாக இல்லத்தில் மகிழ்ச்சி இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கக்கூடிய கால கட்டங்களாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட பணியை செய்து முடித்து பாராட்டுகளை பெறுபவர்களாக இருப்பீர்கள். மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இருக்கும். விட்டுக்கொடுத்து செல்ல பார்ப்பீர்கள்.
எல்லாவிதமான சூழலும் உங்களுக்கு சுமுகமாக இருக்கும். பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தைக் கொடுக்கும். காதலில் சுறுசுறுப்பாக உங்களால் செயல்பட முடியும். காதல் உள்ள பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு அற்புதமான நாள். மாணவர்கள் தைரியமாக சில முடிவுகளை எடுக்க முடியும். கல்விக்காக சில திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறம்