கும்பம் ராசி அன்பர்களே! சில காரியங்களை எதிர்மறையாக செய்ய வேண்டி இருக்கும்.
இன்று சிலர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் அணுக கூடும். முன்யோசனையுடன் நீங்கள் விலகி செல்வது நல்லது. சில நபர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடும். அதனை நீங்கள் முன்னரே புரிந்துகொள்ளவேண்டும். தொழில் வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை வாங்க வேண்டாம். எது வேண்டுமோ அதை மட்டும் வாங்க வேண்டும். சாமர்த்தியமான பேச்சு மூலம் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பது மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். தொட்டது துலங்கும். விட்ட குறைகளை சரி செய்யும் நாளாக இருக்கும். எல்லா வகையிலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு பாடங்களை நீங்கள் படிக்க வேண்டும். மாணவர்கள் எதையும் தைரியமாக செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சில காரியங்களை எதிர்மறையாக செய்ய வேண்டிய சூழல் இருக்கும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு கௌரவம் யாவும் தேடி வரும். உங்களுடைய நேர்மையான பணிக்கு கண்டிப்பாக நல்லது நடக்கும். உத்யோகம் செல்லக் கூடியவர்கள் பயணங்களின் போது கவனம் வேண்டும். உத்யோகத்தில் சக நண்பர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதல் விவகாரங்கள் எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். காதலை நினைத்து நீங்கள் வருத்தப்பட வேண்டாம். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8 அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்