Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! விட்டுக்கொடுக்க வேண்டும்….! தடைகள் விலகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மனதை அமைதி நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்று சிலர் உங்களுக்கு தவறான ஆலோசனை கொடுக்க கூடும். அவர்கள் உங்களை தவறான நோக்கோடு அனுக கூடும். அதனை முன்கூட்டியே நீங்கள் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். இன்று முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்கால நலன் கருதி எதிலும் விலகியிருப்பது நல்லது. மனதை அமைதி நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். தடைகள் நீங்கி விடும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் கண்டிப்பாக நீங்கிவிடும். கணவன் மனைவிக்கு இடையே சச்சரவுகள் உண்டாகலாம். அதனை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடன் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரையும் பற்றியும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். இன்று காதல் கொஞ்சம் கசக்கும் படியாக இருக்கும். புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மாணவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். மாணவர்கள் பொறுமையாக இருந்து பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆலோசனை கேட்டு எதையும் செய்வது நல்லதைக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் பிரவுன் 

Categories

Tech |