கும்பம் ராசி அன்பர்களே.! எதிர்பார்த்த வெற்றி கண்டிப்பாக இருக்கும்.
இன்றைய நாள் வியாபாரத்தில் புதிய ஆலோசனைகளும் நல்ல வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். பல வகையில் உங்களுக்கு பண வரவு இருக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் கருத்து மோதல்களும் இருக்கும். ஒரு சில காரியங்களை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த விரிசல்கள் சரியாகும். பிரச்சனைகள் தீரும். குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் அதனை வாங்கி கொடுப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த வெற்றி கண்டிப்பாக இருக்கும்.
சமூக சேவையில் அதிக ஆர்வம் இருக்கும். பெண்களுக்கு சில காரியங்களில் காரிய தாமதம் இருக்கும். பெண்கள் எதையும் யோசித்துச் செய்தால் முன்னேற்றம் கிடைக்கும். காதலில் உள்ள பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். காதல் கைக்கூடி ஆனந்தத்தைக் கொடுக்கும். தேவையில்லாத குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் எதையும் கையாள கூடியவர்களாக இருப்பார்கள். மனதிற்குள் துணிச்சல் இருக்கும். கல்வி மீது அக்கறை ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்