கும்பம் ராசி அன்பர்களே.! உதவிகள் கிடைக்கும்.
இன்று வியாபார விரிவாக்கங்கள் வெற்றி பெற்று எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சொந்த வீடு வாங்க கூடிய எண்ணங்கள் உருவாகும். வியாபாரம் வளர்ச்சி பெற அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். உயர்வான குணங்கள் வெளிப்படும். உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். செல்வாக்கு மேலோங்கும். செல்வம் சேர்ந்துவிடும். தனவரவு பெருகும். ஆதாயம் தரக்கூடிய பதவிகள் கிடைக்கும். வருமானத்தை இரட்டிப்பாக்கி கொள்ள முடியும். கடன் பிரச்சனைகளை நினைத்து வருந்த வேண்டாம். எதிர்பாராத விஷயங்களில் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
ஆடை ஆபரணங்கள் சேரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். பயணங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். காதல் ஆனந்தத்தைக் கொடுக்கும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவர்களுக்கு மென்மேலும் முன்னேற்றம் காத்திருக்கின்றது. மாணவர்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் மஞ்சள்