கும்பம் ராசி அன்பர்களே.! பணவரவு ஓரளவு நல்ல படியாக இருக்கும்.
இன்று தொழிலில் உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். நட்பு வட்டாரத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். பேசும்போது அமைதியை ஏற்படுத்த வேண்டும். தேவை இல்லாத முன் கோபங்களால் மனம் சஞ்சலம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் ஓரளவு நல்லபடியாக நடக்கும். பணவரவு ஓரளவு நல்ல படியாக இருக்கும். சிக்கனம் தேவை. நகை பணத்தை இரவல் கொடுக்க வேண்டாம். கடனாக நீங்களும் வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறைகள் எதுவும் சொல்ல வேண்டாம். தயவு செய்து விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
உறவினர்களிடம் பேசும்போது எச்சரிக்கை வேண்டும். சந்தேக நோக்கில் யாரையும் பார்க்க வேண்டாம். சமூக பொறுப்புகள் கூடும். அதனால் மதிப்பும் மரியாதையும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தேவையில்லாத பிரச்சினைகளை பேச வேண்டாம். மற்றவர்களுக்கு உதவி செய்கிறேன் என்று எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமை தேவை. வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். காதல் ஓரளவுதான் கை கூடும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் மஞ்சள்