Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பொறுப்புகள் கூடும்….! பிரச்சினைகள் தீரும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! எதிர்கால நலன் கருதி சில திட்டங்களை செய்வீர்கள்.

இன்று உங்களுக்கு சுமாரான நாள் என்று சொல்ல முடியும். ஓரளவு நல்லது நடக்கும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதமாக கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறமை இருக்கும். சிறப்பான நாளாக நீங்கள்தான் மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். பயணங்கள் செல்ல வேண்டிய சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எல்லா விதத்திலும் நன்மை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேரும் அமைப்பு இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வழக்கு விவகாரங்களில் தலையிட வேண்டாம். புதிய உத்தியோக வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி சில திட்டங்களை செய்வீர்கள்.

எல்லாவிதமான நல்லதும் நடக்கும். குடும்ப பிரச்சனைகளை எல்லாம் சரியாகும். காரியத்தடை தாமதம் எல்லாமே சரியாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். காதலில் மகிழ்ச்சி இருக்கும். கண்டிப்பாக காதல் நல்லவிதமாக அமையும். மாணவர்களுக்கு அதிகப்படியான பொறுப்புகள் இருக்கும். கல்வியில் முன்னேற வேண்டும். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று முடிவுகள் தெளிவாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 7                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |