Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! சந்தோசம் உண்டாகும்….! மனக்குழப்பம் சரியாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே.! ஆசைகள் நிறைவேறும்.

இன்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் கூட ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். சிலருக்கு வீடு வாகனம் பராமரிப்புகள் இருக்கும். முன்னோர் சொத்துக்கள் உங்கள் கையில் வந்து சேரும். கடுமையான உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியிருக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கடனில் ஒரு பகுதி கண்டிப்பாக அடையும். பணவரவு சீராக இருக்கும். மனக்குழப்பமும் சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திறமையாக செயல்படுவீர்கள். பாராட்டும் புகழும் கண்டிப்பாக கிடைக்கும். சிறிது கோபம் வரும். அதனை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வேற்றுமொழி பேசும் நபரால் நன்மை கிடைக்கும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். காதல் கைகூடி விடும். காதலில் உள்ள சிரமங்களும் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழல் உருவாகும். மாணவர்களுக்கு நிதானம் வெளிப்படும். கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். கல்வியில் இருந்த தடைகள் விலகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 9                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |