Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! குழப்பங்கள் நீங்கும்….! கவனம் தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! மன குழப்பங்கள் நீங்கும். 

இன்று பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். சமூக அக்கறை அதிகமாக இருக்கும். சந்திராஷ்டம தினத்தில் நடந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மனதில் இருந்த குழப்பங்கள் சரியாகும். முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். தொழில் வளர்ச்சி இலக்கு பூர்த்தி ஆகும். பணவரவு நன்மையை கொடுக்கும். நண்பர்களுடன் பொழுதை கழிக்க வேண்டிய சூழல் இருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடி அன்பு பிறக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

பெண்கள் தீ ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். காதல் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். காதல் திருமணத்தில் முடியக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. மாணவர்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். மேற்கல்விக்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரியபகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                        அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 5                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள்

Categories

Tech |